லோகோஸ் ஹோப் மிதவை உல்லாச கப்பலில் புத்தக கண்காட்சி

செய்தி  : ஆர்.தசதரன்
செப்     : 13.09.2015
ஜோர்ஜ் டவுன்


லோகோஸ் ஹோப் மிதவை உல்லாச கப்பலில் புத்தக கண்காட்சி



லோகோஸ் ஹோப் உல்லாச கப்பல் ஜெர்மனி நாட்டை தலமாக கொன்ட உல்லாச கப்பல்.இந்த கப்பல் ஒரு தொண்டுழிய நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலாகும்.இந்த கப்பல் 1973 ஆம் அண்டு உருவாக்க பட்டது  .உலகை வளம் வரும் மிதக்கும் "புத்தக கப்பல்" என்ற பெயரும் இந்த கப்பலுக்கு உண்டு.    இக்கப்பலின் சிறப்பு ஆயிரத்துக்கு மேற்பட்ட தலைப்புகளில் என்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட  புத்தகங்களை காட்சிப் பொருளாக இன்தக்   கப்பலில் வைக்கபட்டுள்ளது.இக்கப்பல் தற்போது ஜோர்ஜ் டவுன் சுவேர்ட்ஹெம் துறைமுகத்தில் வந்து இறங்கியுள்ளது.

பொதுமக்கள் இந்த கப்பலில் உள்ள புத்தகங்களை பார்வையிடுவதுடன் வாங்கவும் முடியும்.காலை மணி 9.30 முதல் இரவு மணி 9.30 வரை இந்த கப்பலில் சென்று புத்தகங்களை காண முடியும் என்று இந்த  கப்பலின் தகவல் தொடர்பு பேச்சாளர் ஆய்வி சூ நண்பனிடம் தெரிவித்தார்.

பட விளக்கம்

1.லோகோஸ் ஹோப்  தோற்றம்

2. புத்தகங்களை வாங்க வந்த விக்டர் கிறிஸ்டினா குடும்பத்தினர்.

3.கப்பலில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் ஒரு பகுதி.
 


Comments

Popular posts from this blog