செய்தி : தசதரன்
ஆக       : 24
பினாங்கு

பினாங்கு மாநிலத்தில் வீடுகளின் விலையேற்றம்  
மாநில கெராக்கான்  கட்சி கண்டனம் .


பினாங்கு மாநிலத்தில் வீட்டின் விலைகள் கட்டுபாட்டில் இல்லாமல், 50% சதவிகிதம் விலையேற்றம் கண்டுள்ளது குறித்து, பினாங்கு மாநில மக்களிடையே சினம் அடைய செய்திருப்பதாக பினாங்கு மாநில  கெராக்கான்  கட்சி கண்டனம் தெரிவித்தது.

வீடுகளின் நிர்ணயிக்கபட்ட விலைகளை காட்டிலும் ,கூடுதலாக சில குறிப்பிட்ட குத்தகையாளர்கள் ஈடுபட்டுள்ளதை,மாநில அரசாங்கம் கண்டு  கொள்ளாமல் இருப்பதை கண்டு பினாங்கு மாநில சட்ட ஆலோகசரும்,பொது பூகார் பிரிவின் இளைஞர் பகுதி தலைவர் ஜேசன் லூ  வன்மையாக சாடினார்.


கடந்த 2014ஆம் ஆண்டு இங்குள்ள பாயா தெருபோங் பகுதியில் 750 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடுகளின் விலைகளை மாநில அரசாங்கம் 200.000 என்ற விலையில் விலை நிர்ணயம் செய்துள்ளதாகவும்,தற்போது அந்த வீடுகளின் விலை 295.000 என்ற தொகைக்கு விற்பனை செய்வதாக ஜேசன் லூ சுட்டிக் காட்டினார்,

இதனிடையே 850 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடுகளின் விலைகள்  300.000என்ற விலைக்கு நிர்ணயம் செய்ய பட்டுள்ளதை, 331.500 என்ற விலை ஏற்றம் கண்டிருப்பதாக சொன்ன அவர்,இதன் தொடர்பில் மாநில அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஜேசன் லூ கோரிக்கை விடுத்தார்.

நிர்ணயம் செய்யும் வீட்டின் விலைகளை காட்டிலும்,அதிகமான விலையில் குத்தகையாளர்கள் வீடுகளை விற்பது குறித்த காரணத்தை பொது  மக்கள் அறிய விரும்புவதாகவும் அவர் தெளிவுப்படுத்தினார்.

நிர்ணயம் செய்யும் வீடுகளின் விலைகளை மாநில அரசாங்க உறுதி படுத்தி,பொது மக்களிடம் குத்தகை நிறுவனங்கள் விற்பனை செய்யும் போது  நிர்ணய விலை மற்றும்  விதி முறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே இந்த விலை ஏற்றம் குறித்து மாநில வீடமைப்பு செயற்குழு தலைவர் ஜெகதிப் சிங் டியோவிடம் வினவியபோது.மாநிலத்தில் வீடுகளின் விலை நிர்ணய திட்டம் அமல்படுதுவதற்க்கு முன்னரே,பாய தெருபோங் வீடமைப்பு திட்டத்தில்  வீட்டு விலைகள் பரிந்துரைக்கபட்டு,பின்பு குத்தகையாளர்களால் ஏற்றம் காணப்பட்டு விட்டதாக விளக்கமளித்ருப்பது குறிப்பிடதக்கது.

பட விளக்கம் 

ஜேசன் லூ  

Comments

Popular posts from this blog