செய்தி :தசதரன் த
செப்    : 12.09.2015
புக்கிட்  மெர்தாஜம்


ஓன் ஹோப் தொண்ழியா சமூக நல இயக்கத்தின் நற்சேவைகள்
        
    
      புக்கிட் மெர்தாஜம் கோத்தா பெர்மாய் பகுதியில் உள்ள ஓன் ஹோப் தொண்டுழிய     இயக்கம்  ஒரு    சமூக நல  இயக்கமாகும்.இந்த இயக்கம் கடந்த 10ன் ஆண்டுகளாக புக்கிட் மெர்தாஜம் பகுதியில் மக்களுக்கு  சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது.இந்த இயக்கத்தின்  சிறப்புகளில் ஒன்று  எல்லா சமூக மக்களுக்கும் சேவை செய்வதையே  தலையாக சேவையாக கருதுகிறது,இதன் மூலம் இந்த இயக்கம் மற்ற இயக்கங்களை காட்டிலும் தனி சிறப்பு வாய்ந்த இயக்கமாக திகழ்ந்து வருகின்றது   .இந்த இயக்கதின்   மூலமாக நம்  இந்தியர்கள்  பயன் அடைந்து உள்ளதாக கூறுகிறார்  இந்த இயக்கத்தின் தலைவர் சுவா சூய் ஹௌ.

இந்த இயக்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு உதவிப் பொருட்களையும்   பண அன்பளிப்பையும் வழங்கியது நிகழ்ச்சி சிறப்புடன்  நடந்தது .இந்த  சேவைகள் யாவும் வசதி குறைவான குடும்பங்களுக்கு,நோயினால் பீடிக்க பட்ட  நோயாளிகளின் மருத்துவ உதவியும்   அடங்கும், பல வசதி குறைந்த  இந்திய குடும்பங்களுக்கு இமச் சடங்குகள்    செய்வதற்கும்   உதவி வருவதாக அதன் தலைவர் சுவா சூய் ஹௌ சொன்னார்.

இந்த இயக்கத்தின் சேவைகளை பொது மக்கள் பெறலாம், அதில் குறிப்பாக சோக்சோ இலக்கவிடம் இருந்து உதவிகளை பெற  முரையான பாரங்களை பூர்த்தி செய்து உதவ இந்த  இயக்கம் உதவ தயராக இருக்கிறது என்று அதன் தலைவர் மேலும் சொன்னார்.இந்த சமூக நல்ல இயக்கத்தில் உதவிகளை பெற  மக்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும்  தெரிவிக்கபட்டது.இதனிடையே இந்த இயக்கத்திற்கு  பொது மக்களிடமிருந்து நன்கொடைகளையும் மற்றவர்களுக்கு உதவும் பொருட்டு  வழங்காலம்  என்று கேட்டுக் கொள்வதாக சுவா சூய் ஹௌ தெரிவித்தார்.இந்த இயக்கத்தை பற்றி மேல் விபரங்களை பெற சுவா சூய் ஹௌ 016-2180000 என்ற எண்ணில்  தொடர்புக்கு கொள்ளலாம்


பட விளக்கம்

1.பொது மக்கள் உதவி பொருட்களை பெறுகின்றனர






 

Comments

Popular posts from this blog