செய்தி : தசதரன்
செப்    : 10.10.2015
பட்டர்வொர்த்


பினாங்கு பாலத்தில் ரொக்கத்திற்கு  பதிலாக மின்னணு முறை அமல் 
 
 
பினாங்கு பாலத்தில் ரோக்கமிள்ளது  மின்னணு முறையிலான  பணம் மட்டுமே செலுத்தும்  முறை  நேற்று  நண்பகல் இருந்து  சுமூகமாக தொடங்கியது . வாகனஓட்டிகள்   மத்தியில் பணமில்லா பரிமாற்றங்கள் எந்த வித பிரச்சனைகளும் எழும்பவில்லை. மின்னியல் முறையில் ஸ்மார்ட் தேக்  (SmartTAG)அல்லது ஸ்மார்ட் தேக் கார்டுகளை பயன்படுத்தி  பயணத்தை மேற்கொண்டனர்.


நேற்று பிளஸ் தலைமை இயக்க அதிகாரி முகமது புவாட் குசைரி  முதல் பத்து வாகன ஓட்களுக்கு  
இலசமாக பினாங்கு பாலத்தில்  செல்ல  மின்னணு அட்டைகளை 'விநியோகித்து  மின்னணு முறையை பார்வையிட்டார்.மின்னணு முறையை அமல் படுத்துவதன் மூலம் 50  % சதவீத போக்குவரத்து நெரிசலை குறைக்க வலி வகுக்கும் என்றும் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர்  சொன்னார்.

இதனிடையே நேற்று நண்பகல் வேலையில் சுமார் 90% வாகன ஓட்டிகள் மின்னணு முறையிலான முறையை பயன்பாடில் ஈடுபட்டதாக பிளஸ் நிறுவன கண்காணிப்பில் கண்டறிய பட்டதாக பிளஸ் தலைமை அதிகாரியான  மேலும்  சொன்னார்.

இந்த மின்னணு முறையிலான  சேவையை  வாகன ஓட்டிகள் சுமூகமாக பெறுவதை உறுதிப்படுத்திட நான்கு மின்னணு கார்டுகளுக்கு கட்டணம் செலுத்தும் இடங்கள் 24 மணி சேவையில் ஈடுபடும் என்றும் மேலும்  கூரினார். இதனுடன் இந்த மின்னணு  சேவையின் மூலமாக முதல் வகுப்பில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மதத்திற்கு 42 வெள்ளி வீதம் மிட்சப்படுத்த   முடியும் என்றும் அவர் சொன்னார். இதற்கிடையில், ஜித்ரா,  புக்கிட் காயு ஹித்தாம் , லுனாஸ்  மற்றும் குபாங் செமாங்  ஆகியா நெடுஞ்சாலைகளிலும் நேற்று தொடங்கி  மின்னணு முறை  ஒருசேர அமலுக்கு வந்தது.
 
 
பட விளக்கம் 
 
மின்னணு சேவையில் ஈதுபடும் இரு சக்கர வாகன ஓட்டி  

Comments

Popular posts from this blog